Home உலகம் இந்தியா அத்துமீறுகிறது – பாகிஸ்தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்குக் கடிதம்!  

இந்தியா அத்துமீறுகிறது – பாகிஸ்தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்குக் கடிதம்!  

512
0
SHARE
Ad

pakishtanஇஸ்லாமாபாத், அக்டோபர் 13 – இந்திய இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படைகளை தாக்கி வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவமும், இந்திய இராணுவமும் கடும் சண்டையிட்டு வருகின்றன. உலக அளவில் அறிவிக்கப்படாத போராகவே இது பார்க்கப்படும் நிலையில் இந்தியத் தரப்பில் இதுவரை 8 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில், பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது முதல் இந்த சண்டை நடந்து வருவதாக இந்திய தரப்பில் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனினும் தற்போது இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தேசிய ஆலோசகராகவும், வெளியுறவுத் துறை ஆலோசகராகவும் இருக்கும் ஸர்தாஜ் அஜீஸ் பாகிஸ்தான் சார்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

“ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை என்பது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அலுவலக குறிப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாகும்”

“இது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் இரு நாட்டு வட்டாரங்களிலும் அமைதியை குலைக்கின்றன. எனவே நிரந்தர பாதுகாப்பும், அமைதியும் நிலவ அனைத்துலக சமுதாயமும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்பட வழிவகுக்க வேண்டும். இதனை பல ஆண்டுகளாக பாகிஸ்தான் தொடர்ந்து நினைவூட்டி வருகின்றது.”

“இது தொடர்பாக, பாகிஸ்தான் மற்றும் இந்திய வெளியுறவு துறை செயலாளர்களுக்கு இடையில் 25-8-2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்தது.”

“இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைக்கோட்டுப் பகுதி மற்றும் அனைத்துலக எல்லைக்கோட்டுப் பகுதியில் சமீப காலமாக இந்தியப் படைகள் நடத்திவரும் அத்துமீறிய தாக்குதலால் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருகின்றது”

“காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காண தங்களது தலைமையிலான ஐ.நா.பாதுகாப்பு சபை, எங்களது இந்த கடிதத்தை பாதுகாப்பு சபையின் அதிகாரப்பூர்வ ஆவணமாக்கி, இதனை அனைத்து நாடுகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.