Home கலை உலகம் திருட்டு குறுந்தட்டுக்கு எதிராக களமிறங்கிய விஷாலுக்கு விஜய் பாராட்டு! (காணொளி உள்ளே)

திருட்டு குறுந்தட்டுக்கு எதிராக களமிறங்கிய விஷாலுக்கு விஜய் பாராட்டு! (காணொளி உள்ளே)

490
0
SHARE
Ad

Vijayசென்னை, நவம்பர் 6 – திருட்டு குறுந்தட்டுக்கு (விசிடி) எதிராக களமிறங்கிய விஷாலுக்கு திரையுலகில் பாராட்டுகள் குவிகின்றன. இப்போது நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு விஷாலைப் பாராட்டியுள்ளார்.

திருட்டு குறுந்தட்யை ஒழிப்பதில் போலீஸை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் முதலில் களமிறங்கியவர் இயக்குநர் நடிகர் பார்த்திபன். தன் படத்தோடு வெளியான மற்ற படங்களின் திருட்டு குறுந்தட்டுக்களை பிடித்துக் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

“குடைக்குள் மழை” என்ற படத்திலிருந்தே இதனைச் செய்து வருகிறார் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் அவரது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பட வெளியீட்டின் போது கூட சென்னையில் பல இடங்களில் தானே நேரடியாக இறங்கி திருட்டு குறுந்தட்டு விற்பவர்களைப் பிடித்துக் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

அவரது வழியில் விஷாலும் சமீபத்தில் களமிறங்கினார். தனது தீபாவளி வெளியீடான ‘பூஜை’  மற்றும் விஜய்யின் ‘கத்தி’ பட குறுந்தட்டுக்கள் விற்றவர்களை பிடித்துக் கொடுத்தார். அவரது இந்த செயலுக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.

அவர் விஷாலுக்கு அனுப்பிய ட்வீட்டில், ” பெருமையாக உள்ளது விஷால். பேசிக் கொண்டிருப்பதைவிட, செயலில் காட்டுவதுதான் சிறந்தது என நிரூபித்துவிட்டீர்கள். திருட்டு விசிடியை ஒழிப்போம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் விஷால்.