Home தொழில் நுட்பம் ‘வாட்ஸ் அப்’-ல் நீல நிற குறியீடுகளை விரும்பினால் மட்டும் பயன்படுத்தலாம்!

‘வாட்ஸ் அப்’-ல் நீல நிற குறியீடுகளை விரும்பினால் மட்டும் பயன்படுத்தலாம்!

611
0
SHARE
Ad

whatsapp-doble-checkகோலாலம்பூர், நவம்பர் 17 – சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட நீல நிற ‘டிக்’ குறி, பயனர்கள் விரும்பினால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் ‘ஆப்சனல்’  எனப்படும் தேர்வு (Optional) வசதியாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னணி செயலிகளுள் ஒன்றான வாட்ஸ் அப்-ல் புதிய வசதி ஒன்று மேம்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், பயனர்களால் அனுப்பப்படும் குறுந்தகவல்களை எதிர்முனையில் இருப்பவர் படித்துவிட்டாரா? இல்லையா? என்பதை அப்பட்டமாக காண்பிக்க உதவும் நீல நிற ‘டிக்’ குறி தான் அது.  எதிர்முனையில் இருப்பவர் படித்துவிட்டார் என்றால் இரண்டு  ‘டிக்’ குறிகள் காட்டும். படிக்கவில்லை என்றால் ஒற்றை ‘டிக்’ குறி இருக்கும்.

பலரின் நட்பு வளர்வதற்கு காரணமாக இருந்த வாட்ஸ் அப், இந்த புதிய அம்சம் மூலமாக பலரின் நட்புக்கு நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது. எதிர்முனையில் இருப்பவர், அளவளாவலை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் இந்த புதிய வசதி காரணமாக, முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நீல நிற ‘டிக்’ குறி, குறுந்தகவல் அனுப்புபவரை விட, குறுந்தகவலைப் பெறுபவரை அதிகம் பாதித்து விட்டது.

#TamilSchoolmychoice

பயனர்களின் தனிமையை (Privacy) வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இந்த புதிய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழத் துவங்கியது. அதன் காரணமாக இந்த வசதி தற்போது விரும்பினால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தற்சமயம் அண்டிரொய்டு திறன்பேசிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி விரைவில், ஆப்பிள் மற்றும் விண்டோஸ் திறன்பேசிகளிலும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.