Home இந்தியா ஏர் கலப்பையால்தான் வளர்ச்சி ஏற்படும் – மோடி

ஏர் கலப்பையால்தான் வளர்ச்சி ஏற்படும் – மோடி

542
0
SHARE
Ad

Narendra_Modiடிசம்பர் 16 – துப்பாக்கி ஏந்தி போராடுவதை விட ஏர் கலப்பையை ஏந்தி உழைத்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் நக்ஸலட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

“துப்பாக்கி விசையை அழுத்தினால் ஒரு உயிரை எடுக்க முடியும். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை அழுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றினால் நாடு வளர்ச்சியடையும்.  துப்பாக்கிகளை விடுத்து, ஏர்க் கலப்பையை கையில் எடுத்து உழைத்தால் வளர்ச்சியை அறுவடை செய்யலாம்”.

#TamilSchoolmychoice

“பழங்குடியின மக்களின் நிலப் பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக சில கட்சிகள் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன”.

“வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்தியில் இருந்தபோது தான்,  பழங்குடியினர் நலத் துறைக்கென தனி அமைச்சகமும், பட்ஜெட் ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டன”.

“எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையென்றால் பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியாது”.

“பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தான் அந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. பழங்குடியினர் நலனை உறுதிப்படுத்தாமல் தேசத்தை வலுப்படுத்த முடியாது. அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை யாரும் பறித்துக் கொள்ள முடியாது”.

“பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களை பாஜக மேற்கொள்ளும். ஜார்க்கண்ட் தேர்தலுக்கான 4 கட்டங்களிலும் வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது. அடுத்த கட்ட வாக்குப்பதிவிலும் இது தொடர வேண்டும். இங்கு நிலக்கரி வளம் அதிக அளவில் உள்ளது”.

“தற்போது அந்தத் துறை இருண்டு கிடக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்தினால் நாட்டிற்கே வெளிச்சம் கொண்டு வரலாம். மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது தந்தை சிபு சோரன் ஆகியோர், தங்களது சொந்த கஜானாவை நிரப்பிக் கொண்டார்களே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை”.

“ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சியடையவும் நிலையான ஆட்சி அமையவும் பாஜகவை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று நரேந்திர மோடி பேசினார்.