Home நாடு சுசுக்கி கிண்ணம்: தாய்லாந்து 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி

சுசுக்கி கிண்ணம்: தாய்லாந்து 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி

686
0
SHARE
Ad

பேங்காக், டிசம்பர் 17 – இன்றிரவு நடைபெற்ற மலேசியா- தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான ஏ.எஃப்.எஃப். சுசுக்கி கிண்ண இறுதிப் போட்டியில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் தாய்லாந்து இரண்டு கோல்கள் போட்டு வெற்றி பெற்றது.

Suzuki Cup Thailand vs Malaysia

முதல் பாதி ஆட்டத்தில் இரு நாடுகளும் சம நிலையில் இருந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் முதலில் கிடைத்த பினால்டி வாய்ப்பை தாய்லாந்து கோலாக்கியது. அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு கோல் அடித்து இரண்டு கோல்கள் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

இறுதி ஆட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட ஆட்டம் இன்று பேங்காக்கில் நடைபெற்று முடிந்தது.

இரண்டாவது கட்ட ஆட்டம் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும். இரண்டு ஆட்டங்களின் முடிவில் கோல்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.

AFF Suzuki Cup 2014