Home உலகம் உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்லலாம் – ஆச்சரியமளிக்கும் ஸ்கைலான் விமானங்கள்!  

உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்லலாம் – ஆச்சரியமளிக்கும் ஸ்கைலான் விமானங்கள்!  

598
0
SHARE
Ad

hypersonic_plane_euலண்டன், டிசம்பர் 22 – உலகின் எந்த மூலைக்கும் நான்கு மணி நேரத்தில் செல்லக் கூடிய அதி நவீன விமானத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

காற்றை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த விமானத்தின் முதற்கட்ட முயற்சிகள் வெற்றி அடைந்துள்ளன. இதுவரை காற்றை விட இரு மடங்கு வேகத்தில் பாயும் ஜெட் எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இவை ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் அளவிலான வெப்பத்தை, ஒரு நொடியின் நூறில் ஒரு மடங்கு நேரத்தில் 150 டிகிரி வெப்ப நிலையாக குளிர்விக்கக் கூடிய தொழில்நுட்பத்தில் உருவானவை.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஜெட் எஞ்சின்கள் காற்றை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும். இதனை இங்கிலாந்தைச் சேர்ந்த  ரு நிறுவனம் தயாரித்து, அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளது.  எனினும், வர்த்தக ரீதியாக இந்த விமானங்களை இந்த நிறுவனம் தயாரிக்கவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், அந்நிறுவனத்தின் எஞ்சின் தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கி, காற்றை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன விமானங்களை தயாரிப்பதற்கான பரிசோதனை செய்து வருகின்றது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயணிகள் விமானங்களுக்கான சிறிய வகை எஞ்சின்களை, சுமார் 250 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் 2018-ம் ஆண்டிற்குள் தயாரிக்க முடியும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் மூலம் உலகின் எந்த மூலைக்கும் நான்கே மணி நேரத்தில் செல்ல முடியும். இது தொடர்பாக அந்த ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் கூறியதாவது:-

“இந்த நவீன தொழில்நுட்பத்துடன் நாங்கள் தயாரிக்கவுள்ள ‘ஸ்கைலான்’ விமானங்கள், இன்னும் 10 ஆண்டுகளில் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும். இந்த விமானங்கள் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களையும் அனுப்பி வைக்க முடியும்”.

“தற்போது செயற்கைக் கோள்களை இராக்கெட்டுகளின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பி வைக்கின்றோம். இந்த விமானங்களின் வரவால் இந்த முறை மாறலாம்” என்று தெரிவித்துள்ளனர்.