Home இந்தியா விமானம் மாயம்: ஏர் ஏசியா இந்திய சேவையில் பாதிப்பு இல்லை!

விமானம் மாயம்: ஏர் ஏசியா இந்திய சேவையில் பாதிப்பு இல்லை!

576
0
SHARE
Ad

airasiaபெங்களூரு, டிசம்பர் 29 – இந்தோனேசியாவில் 162 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் மாயமான காரணத்தினால் இந்தியாவில் விமான போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மாயமானது. மாயமான விமானத்தின் உரிமையாளரான ஏர் ஏசியா நிறுவனம், சென்னை, பெங்களூரு, கொச்சி உள்பட 7 முக்கிய நகரங்களில் இருந்து தினசரி விமான சேவையை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தோனேசிய விமானம் மாயமான சம்பவத்தால், இந்தியாவில் தங்களது விமான சேவைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏர் ஏசியா விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் பெங்களூரில் தெரிவித்துள்ளார்.