Home வணிகம்/தொழில் நுட்பம் 2014-ல் இரட்டிப்பு வருவாய் – சியாவுமி அறிவிப்பு!

2014-ல் இரட்டிப்பு வருவாய் – சியாவுமி அறிவிப்பு!

563
0
SHARE
Ad

பெய்ஜிங், ஜனவரி 6 – 2014-ம் ஆண்டில் செல்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சியாவுமி, இரட்டிப்பு வருவாய் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி செல்பேசிகள் தாயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள சியாவுமி, அண்மையில் மிகுந்த மதிப்பு மிக்க தொழில்நுட்ப நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனம் வர்த்தக ரீதியாக 2013-ம் ஆண்டை விட 2014-ல் 135 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

xiaomi-logo

#TamilSchoolmychoice

2014-ம் ஆண்டில் மட்டும் சியாவுமி 61 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 11.97 பில்லியன் டாலர்கள் ஆகும். இது  2013-ம் ஆண்டை விட 227 சதவீதம் அதிகம் என்பது வியக்க வைக்கும் தகவலாகும்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி லி ஜுன் கூறியதாவது:-

“2014-ம் ஆண்டு, சியாவுமிக்கு பல்வேறு முக்கிய மைல் கற்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆரம்ப காலங்களில் எங்கள் நிறுவனத்திற்கு சீன சந்தைகளில் கடைசி இடம் தான் கிடைத்தது. ஆனால், தற்போது நாங்கள் சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்துள்ளோம்.”

“சீனாவிற்கு வெளியே, மிக முக்கிய சந்தைகளிலும் நாங்கள் முன்னிலை பெற்று வருகின்றோம். எதிர்காலத்தில், எங்கள் நிறுவனம் மேலும் பல நாடுகளில் தடம் பதிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவிற்கு அடுத்ததாக சியாவுமியின் முக்கிய சந்தையாக இந்தியா இருந்து வருகின்றது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சியாவுமி, சுமார் 1 மில்லியன் திறன்பேசிகளை அங்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில், சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திய சியாவுமி, விரைவில் இந்தியாவிலும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.