கொழும்பு, ஜனவரி 14 – ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்று தொடங்கிய போப் பிரான்சிஸ், தனது பயணத்தின் முதல் கட்டமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
’கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள போப், நாளை கடற்கரையில் நடைபெறும் திறந்த வெளி கூட்டத்தில் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார்.
அந்நாட்டில் 40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவடைந்ததை தொடர்ந்து முதல் முறையாக போப் அங்கு வந்துள்ளார்.
தனது இலங்கை பயணத்தில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு பகுதியில் உள்ள மிகப்பழமையான தேவாலயம் ஒன்றிற்கும் போப் செல்ல உள்ளார். பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்லும் போப், அங்கும் திறந்த வெளி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
-படங்கள் EPA