Home உலகம் லண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை – டேவிட் கேமரூன் ஆலோசனை!

லண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை – டேவிட் கேமரூன் ஆலோசனை!

757
0
SHARE
Ad

whatsapp-லண்டன், ஜனவரி 14 – பிரிட்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற தகவல் தொடர்பு வசதிகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்ற வாரம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் பிரிட்டனையும் உலுக்கியது.

இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார்.

புதிதாக வரவுள்ள ஆன்டி-டெரர் சட்டங்கள் அடிப்படையில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற வசதிகளை தீவிரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக உள்ளது.

#TamilSchoolmychoice

எனவே பிரிட்டன் புலனாய்வுத் துறை இந்த வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய அதிபர் டேவிட் கேமரூன்,

“எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய எந்தவித தகவல் தொடர்பு வழிமுறைகளையும் நான் அனுமதிக்க போவதில்லை. அதற்கு நிச்சயம் வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்”.

இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.