Home கலை உலகம் தனுஷின் ”அனேகன்” படத்திற்கு தடை விதிக்கக்கோரி 500 சலவை தொழிலாளர்கள் மனு!

தனுஷின் ”அனேகன்” படத்திற்கு தடை விதிக்கக்கோரி 500 சலவை தொழிலாளர்கள் மனு!

882
0
SHARE
Ad

Anegan_Posterமதுரை, ஜனவரி 16 – தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மதுரை மாநகர போலீஸ் ஆனையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை வண்டியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாலின்மணி, கே.கே. நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் ஆனையர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் சலவை தொழிலாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளது”.

#TamilSchoolmychoice

“எனவே, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், அந்த வசனங்களை எழுதிய கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த தனுஷ், ஜெகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் ஆனையர் சஞ்சய் மாத்தூர், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்துள்ளார். இது குறித்து மதுரை போலிஸார் இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.