Home நாடு ஏர் ஆசியா QZ8501: முதற்கட்ட விசாரணை அறிக்கை பொதுவில் வெளியாகாது!

ஏர் ஆசியா QZ8501: முதற்கட்ட விசாரணை அறிக்கை பொதுவில் வெளியாகாது!

553
0
SHARE
Ad

Air Asia Big parts carried in a shipகோலாலம்பூர், ஜனவரி 21 – ஜாவா கடலில் 162 பேருடன் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் விபத்திற்கான காரணம் குறித்த 30 நாள் விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிடப்போவதில்லை என இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் இக்னாசியஸ் ஜோனன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கைகளை அனைத்துலக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பிடம் அடுத்த வாரத்தில் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்து 30 நாட்களுக்குள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை உள்நாட்டு விமானப் போக்குவரத்துறையிடம் சமர்ப்பிக்கப் படவேண்டும்.

#TamilSchoolmychoice

“விபத்து நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. அதற்கான முதற்கட்ட விசாரணை அறிக்கையை மட்டுமே உருவாக்கியுள்ளோம். அதில் எந்த ஒரு கருத்துக்களோ அல்லது ஆய்வுகளோ இல்லை. இந்த அறிக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.