Home உலகம் 26-ஆம் தேதி பூமியை நெருங்கும் ‘2004 பிஎல் 84’ விண்கல்!

26-ஆம் தேதி பூமியை நெருங்கும் ‘2004 பிஎல் 84’ விண்கல்!

472
0
SHARE
Ad

meteor-closeby-travelகேப்கேனவரல், ஜனவரி 23 – கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட ‘2004 பிஎல் 84’ என்ற விண்கல், எதிர்வரும் 26-ஆம் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூ மெக்சிகோவில் உள்ள ‘லிங்கன் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச்’ (Lincoln Near-Earth Asteroid Research) என்ற ஆராய்ச்சி அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் ‘2004 பிஎல் 84’ என்ற மிகப் பெரிய விண்கல் விண்வெளியில் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த விண்கல் பூமியை நெருங்கி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நாசா அமைப்பின் முன்னாள் ஆராய்ச்சியாளரான டான் யோமேன்ஸ் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“வருகிற 26-ம் தேதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும், அந்த விண்கல்லுக்கும் இடையேயான இடைவெளி 12 லட்சம் கி.மீ. ஆக இருக்கும்”.

“இன்னும் 200 ஆண்டுகளுக்கு, ‘2004 பிஎல் 84’ விண்கல், பூமிக்கு இவ்வளவு அருகாமையில் வராது” என்று தெரிவித்துள்ளார்.இதே கருத்தினை மற்ற விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிகல் பூமிக்கு நெருக்கமாக வருகின்ற பொழுது, வட துருவத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறிய டெலஸ்கோப் மூலமாக இந்த விண்கல்லை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.