சென்னை, ஜனவரி 23 – சன் தொலைக்காட்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது என வைகோ தெரிவித்தார். யாரையும் துன்புறுத்தவதோ, சித்தரவாதை செய்யவோ சட்டத்தில் இடமில்லை.
துன்புறுத்துவது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது, கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கருத்தினை பதிவு செய்தார்.
தயாநிதி மாறனுக்கு எதிராக ஒருவரை மிரட்டி சாட்சியம் பெரும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். மேலும் சாட்சியம் பெற அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் வைகோ கூறினார்.
அமைச்சரது உதவியாளராக ஒருவர் இருந்தார் என்பதால் கைது செய்வது மனித உரிமை மீறல். இதை நானும் என் கட்சி உறுப்பினர்களும் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று வைக்கோ கூறினார்.