Home கலை உலகம் தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களை அடிக்க சென்ற சல்மான் கான்! (காணொளியுடன்)

தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களை அடிக்க சென்ற சல்மான் கான்! (காணொளியுடன்)

539
0
SHARE
Ad

salman_s-615x324புதுடெல்லி, பிப்ரவரி 4 – தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களை சல்மான் கான் அடிக்க சென்றதால் இந்தி சினிமா உலகில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சல்மான் கான் பொன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சிலர் அவரை பின் தொடர்ந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சல்மான் கான் வாகனத்தை நிறுத்தி தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களை அடிக்கச் சென்றுள்ளார். இதனால் இந்தி சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சாதாரணமாக ஒரு நடிகரோ அல்லது நடிகையோ எங்கேயாவது வெளியில் பார்த்தால் போதும், நமக்கு சந்தோஷம் வரும். அவர்களை பார்த்தது மட்டுமில்லாமல் அவர்களை பின்தொடரவும் ஆசைப்படுவோம்.

இந்நிலையில், சல்மானை கானை அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்த காணொளி ஒன்று தற்போது வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.