பெய்ஜிங், பிப்ரவரி 10 – சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல் முறையாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், ஜின்பிங்கிற்கு அமெரிக்கா வரும்படி விடுத்த அழைப்பை ஏற்று அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்காவிற்கான சீன தூதர் குயூ டியாங்காய் கூறுகையில், “சீன அதிபரின் பயணத்திட்டங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஜி ஜிங்பிங்கின் பயணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. எனினும் அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சீன அதிபரின் அமெரிக்க பயணத்தை சீன ஊடகங்கள் வரவேற்று உள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு பலம் பெற்றுள்ள நிலையில், ஆசிய வட்டாரத்தில் தங்கள் நாட்டின் நலனை கருதி ஜிங்பிங், அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.