Home நாடு “காஜாங் வேண்டாம்… சுங்கை பூலோ சிறை கொடுங்கள்” – அன்வார் கோரிக்கை

“காஜாங் வேண்டாம்… சுங்கை பூலோ சிறை கொடுங்கள்” – அன்வார் கோரிக்கை

415
0
SHARE
Ad

Anwarபுத்ரா ஜெயா, பிப்ரவரி 10 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டுகள் சிறை தண்டனையை, சுங்கை பூலோ சிறையில் கழிக்க விரும்பவதாக அன்வார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக அவரது வழக்கறிஞர்களுள் ஒருவரான கோபிந்த் சிங் டியோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, நீதிமன்றத்தில் இருந்து அன்வார் சிறப்பு வழியின் மூலம் வாகனத்தில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டார். என்றாலும் அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் வாகனம் நகர இயலாமல் நிற்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், பாதுகாப்புப் படை இரண்டாவது முறையாக கூட்டத்தை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice