Home உலகம் லீ குவான் யூவிற்கு நிமோனியா – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

லீ குவான் யூவிற்கு நிமோனியா – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

512
0
SHARE
Ad

lee_kuan_yew_ap_328சிங்கப்பூர், பிப்ரவரி 24 – சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ (91) நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, நிமோனியா காய்ச்சல் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் வரை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், அவரது உடல் நிலை குறித்த பிற விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

ஏற்கனவே அவர் இதய நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1923 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவரான லீ குவான் யூ, பெரும் போராட்டங்களுக்கு மத்தியில், சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். 31 ஆண்டுகள் மிகத் திறமையாக ஆட்சி செய்த அவரின் தலைமையின் கீழ் சிங்கப்பூர் உலக அளவில் பொருளாதார வளம்மிக்க நாடாக உருமாறியது. அதன் காரணமாக மக்கள் அவரை நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றும், சிங்கப்பூரின் தந்தை என்றும் கொண்டாடுகின்றனர்.