Home இந்தியா பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்!

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்!

608
0
SHARE
Ad

nitish-kumar4565பாட்னா, பிப்ரவரி 23 – பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார். பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

அவருக்கும் 22 அமைச்சர்களுக்கும் ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பதவி பிரமாணமும் மற்றும் ரகசிய பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதலமைச்சர் தருண் கோகாய், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tamil_Daily_News_2634044885636சமாஸ்வாடி கட்சி தலைவர் முகலாயங் சிங் யாதவ், ராஸ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் ஆகியோர் தங்கள் இல்லத் திருமணம் காரணமாக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

மேலும் காங்கிரஸ், ராஸ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பின்னர் அரசில் சேரும் என எதிபார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையில் அடுத்த மாதம் 16-ஆம் தேதிக்குள் பெருபான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் நிதிஷ்குமாரை ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது