Home உலகம் லீ குவான் இயூ உடல்நிலை மேலும் மோசமடைந்தது!

லீ குவான் இயூ உடல்நிலை மேலும் மோசமடைந்தது!

535
0
SHARE
Ad

Lee kuanசிங்கப்பூர், மார்ச் 18 – நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் (வயது 91) உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், மிகவும்  மோசமாகிவருவதாகவும் சிங்கப்பூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூர் பிரதமர் துறை அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, நிமோனியா காய்ச்சல் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ குவான் இயூவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice