ஜகார்த்தா, மார்ச் 18 – இந்தோனேசியாவில் இன்று கடலுக்கடியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.6 ஆக பதிவானதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
முதற்கட்ட தகவலின் படி இந்த சம்பவத்தால் எவ்வித பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிகிறது. அதே போல் சுனாமி எச்சரிகையும் விடப்படவில்லை.
கிழக்கு இந்தோனேசியா, மலுக்கு தீவின் கிழக்கு பகுதியில் உள்ள டெர்னேட்டில், இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதங்களில் மட்டும் இரண்டு முறை இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.