Home இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் – இந்தியா

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் – இந்தியா

406
0
SHARE
Ad

pakistan-indiaபுதுடெல்லி, மார்ச் 20 – அனைத்து இரு தரப்பு பிரச்னைகளுக்கும் சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாக பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தை அமைதியான, தீவிரவாத தாக்குதல்கள் இல்லாத சூழ்நிலையில் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சென்ற வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை உறுதிபட தெரிவித்துள்ளார் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் அளித்துள்ள பதில்: “சார்க் நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தின்போது இம்மாதம் 3-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு சென்றார் வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்.”

#TamilSchoolmychoice

“அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் அய்சாஸ் சவுத்ரியை சந்தித்துப் பேசினார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேசிய பாதுகாப்பு செயலர் அர்தாஸ் அஜிஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்”.

“அப்போது லாகூர் பிரகடனம், சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்புக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா தயாராக உள்ளது. அதே நேரத்தில் எல்லை கட்டுப்பாட்டை மதித்து பாகிஸ்தான் நடக்க வேண்டும்”.

“தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்த வேண்டும். அமைதியான சூழ்நிலையில்தான் இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக உள்ளது என்பதை பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்” என தனது பதிலில் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், “இந்த பிரச்னையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து தொடர்ந்து நடந்துவரும் அத்துமீறல்கள், தீவிரவாத செயல்கள் குறித்த நமது கவலையை மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும்  தெரிவித்துள்ளோம்” என்றார் வி.கே. சிங்.

மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், “இந்தியா-சீனா இடையேயான இரு தரப்பு உறவுகளில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் தொடர்கின்றன” என்று வி.கே. சிங் பதிலளித்தார்.