Home உலகம் வாழ்வின் இறுதி கணங்களில் லீ குவான் இயூ!

வாழ்வின் இறுதி கணங்களில் லீ குவான் இயூ!

581
0
SHARE
Ad

51851974 சிங்கப்பூர், மார்ச் 21 – சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் (வயது 91) உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக இன்று சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, நிமோனியா காய்ச்சல் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ குவான் இயூவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

என்றாலும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி அபாயக்கட்டத்திலேயே இருப்பதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

?????????????????????????????

சிங்கப்பூர் மருத்துவமனை கட்டிடத்தின் ஒரு பகுதியில், லீ குவான் இயூவிற்காக பொதுமக்கள் தங்களது பிரார்த்தனைகளை மேற்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் தினமும் பல சிங்கப்பூரர்கள் மலர்களை வைத்து லீ குவான் இயூவிற்காக பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.