கொழும்பு, மார்ச் 23 – இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு முதல் முறையாக அந்நாட்டின் அரசில், எதிர்கட்சிகளை சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில், 43 உறுப்பினர்களை கொண்டுள்ள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரனில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக, அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நியமனம் செய்தார். மேலும், அவருடன் 13 புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் அரசியில் ரீதியாக பாதிப்பிற்குள்ளான எதிர்க்கட்சிகளை சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து நேற்று தனது அமைச்சரவையை சிறிசேனா அமைத்துள்ளார். மேற்கூறிய உறுப்பினர்களில் 11 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து இலங்கை அமைச்சரவையின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.