Home நாடு ரபிசி இன்றிரவு தடுப்புக் காவலில்! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

ரபிசி இன்றிரவு தடுப்புக் காவலில்! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

611
0
SHARE
Ad

RAFIZIகோலாலம்பூர், மார்ச் 27 – கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்றிரவு தலைநகர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அவரைத் தொடர்ந்து காவலில் வைக்கும் காவல் துறையின் விண்ணப்பம் நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதற்காக அவர் நாளை நீதிமன்றம் கொண்டுவரப்படுவார் என்றும் அவரது வழக்கறிஞர் மெலிசா சசிதரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உடல் நலக் குறைவை எதிர் நோக்கியிருக்கும் ரபிசி இன்றிரவு கோலாலம்பூர், பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது உடல் நலக் குறைவு குறித்து காவல் துறையிடம் பலமுறை புகார் கூறிய பின்னர் அவரை இப்போதுதான் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றார்கள் என அவரது வழக்கறிஞர் தெரிவித்ததாக மலேசியன் இன்சைடர் இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice