Home கலை உலகம் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்களுக்கு தனுஷ் தங்க சங்கிலி பரிசு!

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்களுக்கு தனுஷ் தங்க சங்கிலி பரிசு!

646
0
SHARE
Ad

pd1kEOdaijaajசென்னை, மார்ச் 28 – 62-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சிலதினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தைகளுக்கான படமாக, ‘காக்கா முட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக படத்தில் நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் தேர்வாகியுள்ளனர்.

மணிகண்டன் இயக்கியிருக்கும் ’காக்கா முட்டை’ படத்தை தனுஷின் வுண்டர்பாரும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட்டும்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததையடுத்து, ’காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும், தேசிய விருது பெற்ற சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் தனுஷ் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது ’காக்கா முட்டை’யின் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படம் கோடை விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது என படத்தின் இயக்குனர்  மணிகண்டன் தெரிவித்தார்.