புதுடில்லி, ஏப்ரல் 1 – நாட்டில், பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக முக்கிய காரணமாக இருந்த, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு, டெல்லியில் நினைவிடம் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள் எல்லாம், நரசிம்மராவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டன. ஆனால், நரசிம்ம ராவின் மறைவுக்கு முன்னரே, அவரை, காங்கிரஸ் கட்சி கைவிட்டு விட்டது.
எனவே, அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்கும் பணியில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. டெல்லியில், முன்னாள் அதிபர் ஜெயில்சிங்கின் நினைவிடம் அருகே, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு நினைவிடம் அமைக்க, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான திட்ட முன்மொழிவை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பி உள்ளது. ஆர்.எஸ்.எஸ், அமைப்புடன் மறைமுக உடன்பாடு செய்து கொண்டு, பாபர் மசூதி இடிபட காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்.
அவருக்கு நினைவிடம் கட்ட, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிப்பது, பாபர் மசூதி இடிப்புக்கு உதவியதற்காக, அவருக்கு அளிக்கும் வெகுமதியாகும் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தெரிவித்தது.