Home நாடு “சைருலை ஆஸ்திரேலியாவில் சந்தித்து காவல் துறை விசாரித்தது” – மகாதீர் கருத்துக்கு ஐஜிபி மறுப்பு!

“சைருலை ஆஸ்திரேலியாவில் சந்தித்து காவல் துறை விசாரித்தது” – மகாதீர் கருத்துக்கு ஐஜிபி மறுப்பு!

553
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 4 – அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி – தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் முன்னாள் அதிரப்படை வீரர் சைருல் அசார் உமார் தெரிவித்திருக்கும் கருத்துகள் குறித்து நாங்கள் விசாரித்திருக்கின்றோம் என்றும் துன் மகாதீர் கூறுவது போல் நாங்கள் விசாரிக்காமல் தவிர்க்கவில்லை என்றும் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் (படம்) தெரிவித்துள்ளார்.

Tan-Sri-Khalid-Abu-Bakarசைருல் கூறியிருந்த எல்லா கருத்துகள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் மேற்கொண்ட விசாரணைகளும், நடவடிக்கைகளும் ஒருவேளை மகாதீருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் (காவல் துறையினர்) சைருலை ஆஸ்திரேலியாவில் சந்தித்தோம். விசாரணைக்குப் பின்னர் மேற்கொண்டு விசாரணைகளைத் தொடரத் தேவையில்லை என முடிவு செய்தோம்” என்றும் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது காலிட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த வழக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. தனது தரப்பு கருத்துகளை முன்வைக்க அவருக்கு பல வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் இருந்தன. அப்போதெல்லாம் கூறாமல் இப்போது மட்டும் கூறுவது ஏன்?” என்றும் காலிட் அபு பாக்கார் கேள்வி எழுப்பினார்.

“இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை. எங்களுக்கு இப்போது தெரிந்ததுதான் எப்போதும் தெரிந்திருந்தது” என்றும் காலிட் கூறினார்.

நஜிப்பின் தலைமைத்துவம் தொடர்ந்தால் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என்றும் அல்தான்துன்யா வழக்கு தொடர்பில் நஜிப் பதில் கூற வேண்டும் என்றும் மகாதீர் தனது வலைப் பதிவில் எழுதியிருந்தார்.

சைருல் நஜிப்பின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி என்பதால், அல்தான்துன்யா உத்தரவின் பேரில்தான் கொலை செய்யப்பட்டார் என்ற சைருலின் கருத்து குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மகாதீர் கூறியிருந்தார்.