கோலாலம்பூர், ஏப்ரல் 6 – முன்னாள் அமைச்சர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் மரணத்தையடுத்து அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், ஜமாலுடினுக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அந்நாட்டு கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தூதரகத்தின் முகநூல் (பேஸ் புக்) பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
“இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் ஜமாலுடினின் படைப்பாற்றல், தூரநோக்குச் சிந்தனை, ஆற்றல் ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன. இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வும் ஈடுபாடும் குறிப்பிடத்தக்கது,” என்று அமெரிக்க தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நஜிப் பிரதமரான பின்பு அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்ட ஜமாலுடின் மலேசிய அரசாங்கத்தின் செல்வாக்கையும், நஜிப்பின் தனிப்பட்ட செல்வாக்கையும் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் மேம்படுத்துவதற்கு வெகுவாகப் பாடுபட்டார்.
அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டபோது தனது அதிகாரபூர்வ நியமன கடிதங்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்த நிகழ்வில் ஜமாலுடின் ஜார்ஜிஸ்