Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிக்கப்படலாம்!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிக்கப்படலாம்!

481
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wan-Azizah-Not contesting

இதற்கான அறிவிப்பை பக்காத்தான் தலைமைத்துவம் இன்று இரவு அறிவிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இன்னொரு தகுதி வாய்ந்த இளம் வேட்பாளர் ஒருவரையும் கட்சி மேலிடம் கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகின்றது.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு எதிர்கட்சித் தலைவரும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.