Home நாடு இடைத்தேர்தலில் வான் அசிசாவை நிறுத்த வேண்டாம் – பெர்மாத்தாங் பாவ் பாஸ் திட்டவட்டம்!

இடைத்தேர்தலில் வான் அசிசாவை நிறுத்த வேண்டாம் – பெர்மாத்தாங் பாவ் பாஸ் திட்டவட்டம்!

535
0
SHARE
Ad

பினாங்கு, ஏப்ரல் 15 – அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலையோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ வேட்பாளராக நியமிக்கக் கூடாது என அத்தொகுதி பாஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Wan-Azizah-Wan-Ismail

அதே வேளையில், இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் பேசுபவர்கள் ஹூடுட் பற்றி வாய் திறக்கக்  கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அத்தொகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் ஜாம்சரி சமத் கூறுகையில், “எங்களது உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது. பிகேஆர் கட்சியிலிருந்து சிறந்த ஒருவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் வான் அசிசாவோ அல்லது அன்வார் குடும்பத்திலிருந்து ஒருவரோ இந்த தொகுதியில் போட்டியிடுவதை இங்குள்ள மக்கள் விரும்பவில்லை.”

“அதேவேளையில் பிகேஆர் இங்கே பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்தால், ஹூடுட் பற்றி பேசக்கூடாது என்று தங்களது பேச்சாளர்களிடம் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்” என்று ஜாம்சரி சமத் கூறியுள்ளார்.