Home இந்தியா ஐபிஎல்: பெங்களூரு அணியைத் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி

ஐபிஎல்: பெங்களூரு அணியைத் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி

680
0
SHARE
Ad

mumbai-indiansபெங்களூரு, ஏப்ரல் 20 – பெப்சி ஐபில் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடின.

தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த மும்பை அணி நேற்று கடுமையாகப் போராடி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வெற்றி கொண்டது.

ஐபிஎல் வரிசையில் இது 16வது ஆட்டமாகும்.

#TamilSchoolmychoice

முதலில் பந்து வீச்சைத் தொடங்கியது பெங்களூர் அணி. முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிந்தபோது மும்பை அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதியில் விளையாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 191வது ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை ஆடிய முதல் நான்கு ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

Bangalore Royal Challengers Logo