லண்டன், ஏப்ரல் 21 – பிரித்தானிய விமான நிலையத்தில் விமானி ஒருவர் கத்திகளுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 வாரத்துக்கு முன்பு ஜெர்மனி விமானத்தில் விமானியை என்ஜின் அறைக்கு வெளியே பூட்டி விட்டு உடன் வந்த விமானி ஆல்ப்ஸ் மலையில் மோத வைத்து 150 பயணிகளை கொன்றார்.
அதில் இருந்து இங்கிலாந்து விமானிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் போயிங் 777 ரக விமானம் 260 பயணிகளுடன் தரை இறங்கியது.
அதை தொடர்ந்து விமான ஊழியர்களின் உடைமைகளை ஸ்காட்லாந்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தின் 61 வயது விமானி ஒருவரது கைப் பையில் ஏராளமான கத்திகள் இருந்தன.
அதை தொடர்ந்து விமானி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்டார். இச்சம்பவம் காரணமாக அந்த விமானம் நேற்று வரை ஹீத்ரு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.