Home இந்தியா டெல்லியில் விவசாயி தற்கொலை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

டெல்லியில் விவசாயி தற்கொலை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

757
0
SHARE
Ad

AAPபுதுடெல்லி, ஏப்ரல் 23 – நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலம் கையக மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று புதன்கிழமை நடத்திய இந்தப் பொதுக்கூட்டத்தில் பார்வையாளராக வந்த கஜேந்திர சிங் அருகே இருந்த மரத்தில் ஏறி அவர் வைத்திருந்த துண்டை மரத்தில் கட்டி திடீரென தூக்கிட்டுத் தொங்கினார்.

இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது.

#TamilSchoolmychoice

gajendra-singh-sitting-in-a-tree-during-aam-aadmi-partyஅதில் “ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர் பகுதி விவசாயி மகன் நான். பயிர்கள் சேதம் அடைந்ததால் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் இருந்த என்னை எனது தந்தை விரட்டிவிட்டார்”.

“மூன்று குழந்தைகளுடைய எனக்கு இப்போது வேலை கிடையாது. இப்போது எப்படி வீடு திரும்புவேன் எனக் கூறுங்கள்? அதனால், எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

farmer_2381918f_2381950fவிவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி டெல்லி காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

விவசாயி தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கஜேந்திர சிங்கின் குடும்பத்திற்கு என் சார்பிலும் பிரதமர் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

farmer1_2382000fடெல்லி போலீஸ் உடனடியாக செயல்பட்டு இதனை தடுக்க முயன்றுள்ளனர். கைதட்டி கூச்சலிடுவதை நிறுத்துமாறு கூட்டத்தினரை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் தற்கொலையை ஊக்குவிக்கும் வகையில் கூச்சலிட்டுள்ளனர்.

இது போலீசாரின் முதல் கட்ட விசாரணை தகவலில் தெரிய வந்துள்ளது. கஜேந்திர சிங் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதை கண்டு, சிலர் துணிகளை அசைத்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்றது தேசிய அவமானம். விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படவில்லை.

farmer-suicide355குற்றவாளிகள் அரசால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். விரைவான விசாரணை நடத்தப்படும். 60 ஆண்டுகளுக்கு மேல் பாதிப்பில் இருக்கும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் இதுவரை 60 சதவீத விவசாயிகள் உணவு மானியத்தை நம்பியே உள்ளனர். இது அரசியல் ஆக்கும் விஷயம் இல்லை என ராஜ்நாத் பேசி உள்ளார்.