Home இந்தியா ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

475
0
SHARE
Ad

chris-gayle3புதுடெல்லி, ஏப்ரல் 27 – ஐபிஎல்-8 டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

211863இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் எடுத்தது. 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 10.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றது