Home உலகம் இலங்கை போரில் காணாமல் போனவர்கள் அறிக்கை சிறிசேனா அரசிடம் சமர்ப்பிப்பு!

இலங்கை போரில் காணாமல் போனவர்கள் அறிக்கை சிறிசேனா அரசிடம் சமர்ப்பிப்பு!

434
0
SHARE
Ad

MY3-615x384கொழும்பு, ஏப்ரல் 27 – இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய ராஜபக்சே அரசால், 3 நபர் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகமா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர், கடந்த 1983 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை தொடங்கினர்.

இந்த குழுவினரிடம், காணாமல் போனவர்கள் குறித்து 16 ஆயிரத்து 153 புகார்கள் வந்தன. இதில் 5 ஆயிரத்து 200 புகார்கள், பாதுகாப்பு வீரர்கள் மாயமானது குறித்தது ஆகும்.

#TamilSchoolmychoice

இந்த புகார்கள் தொடர்பாக சுமார் 1440 புகார்தாரர்களிடம் இருந்து வாய்வழி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது.