Home நாடு “காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்

“காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்

722
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 4 – ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி எதிர்ப்பு பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் காவல் துறையினர் தன்னைத் தாக்கியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா (படம்) கூறியுள்ளார்.

tian-chuaசனிக்கிழமை நள்ளிரவில் பினாங்கு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் காவல் துறையினர்  தனது காரைத் தடுத்து நிறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அச்சமயம் தாம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என அவர்களிடம் கேட்டேன். அப்போது பணிப் பொறுப்பில் இருந்த அதிகாரியின் பெயரையும் கேட்டபோது, என்னை காரிலிருந்து ஆக்ரோஷத்துடன் வெளியே இழுத்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தை நோக்கி என்னை தள்ளியதுடன், எனது பின் தலையிலும் அடிக்கத் தொடங்கினர்,”
என்றார்  தியான் சுவா.

#TamilSchoolmychoice

ஒரு காவலர் தனது தலைமுடியைப் பிடித்து இழுத்து போலீஸ் வாகனத்துக்குள் திணித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், காருக்குள் மற்றொரு போலீஸ்காரர் தன்னை அறைந்ததாகவும் கூறியுள்ளார்.

“இதையடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் கோலாலம்பூர் அழைத்து வந்தனர். இது கேலிக்கூத்தான நடவடிக்கை. அவர்கள் சுமுகமான முறையில் என்னைக் கைது செய்திருக்க முடியும்,” என்றார் தியான் சுவா.

ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அவர் காவல் நிலையத்திலேயே தடுத்து
வைக்கப்பட்டிருந்தார்.