Home உலகம் எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை!

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை!

550
0
SHARE
Ad

112812_MideastEgyptMorsis-550x309கெய்ரோ, மே 17 – எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு, சிறையை உடைத்து தப்பிச் சென்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், தனது ஆட்சியின் போது, போராட்டக்காரர்களை கைது செய்து துன்புறுத்திய வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி ஆவார். அவருக்கு முன் அதிபர் பதவியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த 2012-ம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் புரட்சியால் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து விரட்டப்பட்டார். அத்தகைய சூழலில் மோர்சி அதிபர் பதவியைக் கைப்பற்றினார். எனினும், அவரால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் இராணுவத் தலைவரான அல் சிசி, மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையில் அடைத்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், மோர்சிக்கு உதவியாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தான், கடந்த 2011-ம் ஆண்டு சிறையை உடைத்து தப்பித்த வழக்கில் மோர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தண்டனை குறித்த இறுதி முடிவு ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.