Home இந்தியா துபாய்க்கு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சல்மான் கான்!

துபாய்க்கு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சல்மான் கான்!

592
0
SHARE
Ad

salமும்பை, மே 21 – பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து வழக்கில் பிணை மனுவில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான், நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் துபாய் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மே 6-ஆம் தேதி சல்மான் கானுக்கு,  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே (48 மணி நேர இடைக்கால) பிணை மனுவில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் அவரை பிணையில் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்தியாவை விட்டு வெளியேறினால் நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுருத்தியிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், துபாயில் வரும் 29-ஆம் தேதி பாலிவுட் நடிகர்களுக்கான, 2015-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் ப்ரியங்கா சோப்ரா, ஜாக்குலின் ஃபெர்னான்டெஸ், வருன் தவான், பெரிநீதி சோப்ரா, நேஹா துபியா போன்றோரும் கலந்துகொள்கின்றனர்.

இதில் பிணை மனுவில் வெளிவந்திருக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்துகொள்வார் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆதலால், மும்பை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார் சல்மான் கான். இப்பயணத்திற்காக சல்மான் கானிற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.