Home உலகம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார் ஹிலாரி கிளிண்டன்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார் ஹிலாரி கிளிண்டன்!

635
0
SHARE
Ad

hillary-talking-syria-1-720x480நியூயார்க், ஜூன் 15 – அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலருமான ஹிலாரி கிளிண்டன், அடுத்த ஆண்டில் அந்நாட்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.

அந்நாட்டின் மிகப்பெரும் நகரான நியூயார்கில் உள்ள ரூஸ்வெல்ட் தீவில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஹிலாரி, தற்போதைய அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட் மற்றும் தனது கணவர் பில் கிளிண்டன் ஆகியோரின் வழியைப் பின்பற்றி, மக்களுக்கான சேவைகளை செய்வேன் என்றார்.

தனது பிரச்சாரத்தைக் காணத் திரண்டிருந்த 5,500 பேருக்கு முன் பேசிய அவர் கூறியதாவது; “அமெரிக்கா நாட்டில் தான், ஒரு தந்தை தனது மகளிடம் நீ எப்படியிருக்க நினைக்கிறாயோ, அதைப்போலவே இருக்கலாம். ஏன் அமெரிக்க அதிபராகக் கூட ஆகலாம் என்று கூறமுடியும்”.

#TamilSchoolmychoice

“நமது நாட்டின் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில், நாட்டின் இளவயது அதிபர் என்ற பெருமையும், பேரக்குழந்தை பெற்ற பாட்டி ஒருவர் அதிபர் ஆனார் என்ற பெருமையும் எனக்குக் கிடைக்கும்” என்று ஹிலாரி நகைச்சுவையாகப் பேசினார்.

அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவர்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளபோதும், அக்கட்சியைச் சார்ந்த வெர்மாண்ட்டைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மால்லே மற்றும் முன்னாள் ரோட் தீவு கவர்னர் லிங்கன் சாபி ஆகியோர் அவருக்குப் போட்டியாளர்களாக உள்ளனர்.