Home இந்தியா பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து!

596
0
SHARE
Ad

nawaz sherrif -புதுடெல்லி, ஜூன் 17 – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கும், பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார்.

மேலும் நோன்பு இருந்து இறைவனை வழிபடும் இந்தப் புனித நிகழ்வை முன்னிட்டு, இந்தியச் சிறைகளில் உள்ள பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதேபோல் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் மோடி தொடர்பு கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.