Home உலகம் எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

647
0
SHARE
Ad

arya11-600x300கெய்ரோ, ஜூன் 17 – சிறை உடைப்பு வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் மரண தண்டனையை, அநநாட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

எகிப்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் மோர்சி. இவரின் பிரிவனைவாதக் கொள்கைகள் பிடிக்காத மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் கடந்த 2013-ல் அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

2011-ல் நடந்த கிளர்ச்சியில், சிறை உடைப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கில், கெய்ரோ நீதிமன்றம் மோர்சி உள்ளிட்ட 20 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

#TamilSchoolmychoice

அந்நாட்டு வழக்கப்படி, முஸ்லீம் மதத் தலைவர்களைக் கொண்ட கிராண்ட் முப்தி அமைப்பு சம்மதித்தால் மட்டுமே மரண தண்டனை அளிக்க முடியும்.

இந்நிலையில் கிராண்ட் முப்தி அமைப்பு மோர்சியின் மரண தண்டனையை ஆதரித்ததால், அவர் உட்பட 20 பேரின் மரண தண்டனையைக் கெய்ரோ நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு மேல் முறையீட்டுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.