Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

“சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை, ஜாகிர் நாயக் உட்பட”!- மொகிதின் யாசின்

மலேசியாவில் யாரும் சட்டரீதியான விளைவுகள் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட முடியாது, ஜாகிர் நாயக் உட்பட என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

“இனம், மதம் ரீதியில் எழும் சீற்றத்தை குறையுங்கள்!”- மொகிதின் யாசின்

இனம் மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமாக எழும் சீற்றத்தை, குறைக்குமாறு உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை

நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எல்லா விதமான நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறை அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.

ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணி அன்வாரின் தொலைபேசி அழைப்பால் இரத்து செய்யப்பட்டது!

அன்வார் இப்ராகிம் தொலைபேசி வழி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் நடைபெறாது, என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

பிரிக்பீல்ட்ஸ் அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, இருவர் கைது!

அரேபிய வனப்பெழுத்து பாடத்தை முன்மொழியப்படுவதற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில், நடந்த அமைதி பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.

“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது!”- காவல் துறை

பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக சமூக ஊடகங்களில், பரவலாகப் பகிரப்படும் செய்தியை காவல் துறையினர் மறுத்துள்ளனர்.

“ஜாகிர் நாயக் எதிர்ப்புக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்!”- காவல் துறை

ஜாகிர் நாயக்கை எதிர்த்து பிரிக்பீல்ட்ஸ்சில் நடக்க இருக்கும் கூட்டத்தில், மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

பாலியல் புகார் கூற இந்தோனிசியப் பெண்ணுக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதா?

பாலியல் வல்லுறவு கொண்டதாகப் புகார் சுமத்தப்பட்டிருக்கும் பவுல் யோங் சூ கியோங் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு 100,000 ரிங்கிட் பணம் தரப்பட்டதாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் ஙே கூ ஹாம் புகார் செய்திருக்கிறார்.

டோங் சோங் மீதான காவல் துறை விசாரணை தொடங்கியது!

சீனக் கல்வியாளர் குழு டோங் சோங் தலைவர் டான் தை கிம் மற்றும் பொதுச் செயலாளர் எங் சாய் ஹெங் ஆகியோர், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தங்களது வாக்குமூலத்தைத் தந்தனர்.

ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத் தடை!

ஜாகிர் நாயக் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பேசுவதற்குத், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.