Home Tags நரேந்திர மோடி மலேசிய வருகை

Tag: நரேந்திர மோடி மலேசிய வருகை

“உங்கள் அனைவருக்கும் வணக்கம்” – தனது உரையை தமிழில் துவங்கிய மோடி!

கோலாலம்பூர் - இன்று மாலை ஸ்ரீகம்பாங்கானில் உள்ள மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் இந்திய வம்சாவளியினருடனான பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அரங்கிலிருந்த இந்தியர்களின் ஏகோபித்த கரகோஷத்துடன் எழுச்சி மிகு உரையாற்றினார். 'உங்கள் அனைவருக்கும்...

“ஒரே ஆசியா – அன்றே கூறியவர் சுவாமி விவேகானந்தர்” – சிலை திறப்பு விழாவில்...

பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள மலேசிய இராமகிருஷ்ண இயக்கத்தின் கட்டிடத்தில் இன்று சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "தீர்க்கதரிசியான சுவாமி விவேகானந்தர்...

சீனப் பிரதமர் லீ – மோடி சந்திப்பு!

கோலாலம்பூர் - ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். "இன்று எனது நண்பர் சீனப்...

“இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது, அதைப் பார்க்க வாருங்கள்”: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

கோலாலம்பூர்- உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை சிறப்பாக இல்லையென்றாலும், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் வீசும் காற்று தற்போது...

ஜப்பானியப் பிரதமர் மோடிக்கு மதிய உணவளித்து உபசரிப்பு!

கோலாலம்பூர் - இன்று காலை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மற்ற உலகத் தலைவர்களைச் சந்தித்து தனது பணிகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டு செயல்படத் தொடங்கினார். இன்று மதியம் ஜப்பானியப்...

“21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கே” – மோடி எழுச்சி உரை

கோலாலம்பூர் - "ஆசியாவின் எழுச்சிக்குத் தேவையானவற்றை ஆசியானைச் சேர்ந்த நாடுகள் அளித்துவருகின்றன. தற்போது 21-ம் நூற்றாண்டை ஆசியான் நூற்றாண்டாக மாற்ற இந்தியாவுக்கான காலம் வந்திருக்கிறது" என மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர...

மலேசியா வந்தார் மோடி – டாக்டர் சுப்ரா அவரை வரவேற்றார்!

கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று அதிகாலை மலேசியாவிற்கு வருகை புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா-வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்.எஸ்.சுப்ரமணியம், உடன்...

உறவுகளை மேலும் வலுப்படுத்த மலேசியா, சிங்கப்பூருக்குப் பயணம்: முகநூலில் மோடி

புதுடெல்லி- பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தற்போது நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் தாம் நாளை பயணம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

மீண்டும் நிகழுமா மோடி- ரஜினி சந்திப்பு? – அதிக எதிர்பார்ப்பில் கோலாலம்பூர்!

கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக மலேசியா வரும் மோடி, உலகத் தலைவர்களை சந்திக்க இருப்பது ஒருபுறம் இருக்க, 'கபாலி'  படப்பிடிப்பிற்காக கடந்த சில வாரங்களாக கோலாலம்பூரில் தங்கி...

நரேந்திர மோடி மலேசிய வருகை – உடன் செல்லும் அமைச்சராக டாக்டர் சுப்ரா நியமனம்!

கோலாலம்பூர் - எதிர்வரும் சனிக்கிழமை (23 நவம்பர் 2015)  காலை கோலாலம்பூர் வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார். மோடி வருகையின் போது...