“இன, மத விவகாரப் போக்கைத் தவிர்ப்போம்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர் - எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் தங்களின் சுய அரசியல் இலாபத்துக்காக உணர்ச்சிகரமான இன, மத விவகாரங்களை கையிலெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காரணம் அதனால், தேசிய மேம்பாட்டுக்கு அத்தகைய போக்கு உதவாது என்றும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இன நல்லிணக்கத்தைப் பேணி வந்துள்ள நமது நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சரான வேதமூர்த்தி மேலும் கேட்டுக் கொண்டார். "நாட்டின் பாதுகாப்பும், நிலைத்தன்மையும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அதிக அரசியல் ஆசைகள் கொண்ட...

10 new Toxic Alcohol poisoning cases reported – Health DG

KUALA LUMPUR -- A total of 10 new cases of toxic alcohol poisoning have been reported at Health Ministry facilities – seven in Selangor one each in Kuala Lumpur, Perak and Negeri Sembilan as at noon today. Health Director-General Datuk Dr Noor Hisham Abdullah (pic) said this brought the total number of toxic alcohol poisoning cases reported to 86 namely 62 cases in Selangor; Kuala Lumpur (16);...

ஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்

Japanese Prime Minister Shinzo Abe speaks during a news conference at prime minister's official residence in Tokyo, Japan, 24 December 2014 after forming new cabinet.

தோக்கியோ - மீண்டும் 3-வது முறையாக ஜப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ஜப்பானின் மிக நீண்ட காலப் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஷின்சோ அபே எதிர்வரும் நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு வருகை மேற்கொள்ள விருக்கிறார். இந்த வருகை வரலாற்றுபூர்வ ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காரணம் இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானிய இராணுவம் 1942 முதல் 1943 வரையில் பல்வேறு தருணங்களில் ஆஸ்திரேலிய நகரான டார்வின் மீது குண்டுமழை பொழிந்தது. அந்த குண்டு வீச்சுகளில் சுமார் 250 பேர் மரணமடைந்தனர். இந்த கசப்பான...

டில்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த மோடி

புதுடில்லி - கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வியாழக்கிழமை புதுடில்லியில் உள்ள துவாரகா என்ற இடத்தில் அமையவிருக்கும் அனைத்துலக தரத்திலான பிரம்மாண்டமான மாநாட்டு கண்காட்சி மண்டபத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது டில்லி துவாரகா செல்லும்போதும் அங்கிருந்து திரும்பும்போதும் டில்லி மெட்ரோ இரயிலில் நரேந்திர மோடி மக்களோடு மக்களாக ஒன்றாக அமர்ந்து பயணம் செய்தார். தென் டில்லி துவாரகா பகுதியில் அமையவிருக்கும் இந்தியா அனைத்துலக மாநாட்டு மையம் (India International Convention Centre -IICC) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரக் கூடிய...

எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

கோலாலம்பூர் - அண்மையில் மறைந்த மலேசியத் தமிழ் எழுத்துலகம் மற்றும் பத்திரிக்கை உலகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் இருவரின் பணிகளையும், பங்களிப்பையும் நினைவு கூரும் வண்ணம் நினேவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை மலேசிய பாரதி தமிழ் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, செந்துல் கறி ஹவுஸ் என்ற இடத்தில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டு அவர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அனைவரும் கலந்து...

“செக்கச் சிவந்த வானம்” – 2-வது முன்னோட்டம்

சென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் உருவாக்கத்தில் வெளிவரவிருக்கும் நட்சத்திரக் குவியல்களைக் கொண்ட "செக்கச் சிவந்த வானம்" திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டு பரபரப்பான இரசிகர்களை ஈர்த்து வருகிறது. முதன் முன்னோட்டத்தைப் போலவே பல்வேறு குழுக்களுக்கு இடையிலான போராட்டங்களைக் காட்டுகிறது இரண்டாவது முன்னோட்டம். எதிர்வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், சிம்பு நடித்த முந்தைய படங்களினால் இன்னும் தீர்க்கப்படாமல் நீடித்துக் கொண்டிருக்கும் பணப் பரிமாற்ற "பஞ்சாயத்துகள்தான்" என்கின்றன அந்தத் தகவல்கள். செக்கச்...

Modi lays foundation-stone for World-class convention centre in New Delhi

NEW DELHI -- India will soon have a world-class convention and expo centre in south Delhi's Dwarka area with a seating capacity of more than 10,000 people, Xinhua news agency reported. With an estimated cost of 26,000 crore Indian Rupees (around US$3.9 billion), the "India International Convention Centre (IICC)" would be among the top five convention halls in the world and top...

நச்சு கலந்த மது – மேலும் 7 புதிய சம்பவங்கள்

கோலாலம்பூர் - நாட்டின் பல பகுதிகளில் நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் பலரும் பாதிக்கப்பட்டு, பல மரணங்கள் நேர்ந்திருக்கும் நிலையில் புதிதாக மேலும் 7 புதிய சம்பவங்கள் நடந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 6 சம்பவங்கள் கோலாலம்பூரிலும் ஒரு சம்பவம் பேராக்கில் நடைபெற்றிருக்கிறது. நச்சு கலந்த மதுபானம் தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இதுவரையில் 76 சம்பவங்கள் சிலாங்கூர், கோலாலம்பூர், பேராக் மாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இதுவரையில் 29 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 18 பேர் சிலாங்கூரிலும், 9 பேர்...

PKR elections begin today

KUALA LUMPUR -- The elections for various posts in PKR began today, with members in Kedah and Penang were the first to go to the polls as early as 9 am. The focus will definitely be on the post of deputy president after Datuk Seri Anwar Ibrahim has been returned unopposed as president on Aug 5. The contest for the post of...

லீ சோங் வெய் – மூக்கு புற்றுநோயால் அவதிப்படுகிறார்

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய் மூக்கில் பீடித்துள்ள புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்ற தகவலை தேசிய பூப்பந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அவர் ஏதோ ஒரு வகை நோயால் அவதிப்படுகிறார் என்ற செய்திகள் ஊடகங்களில் உலவி வந்தன. அதற்காக அவர் தைவானில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரது மூக்கு புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியிட்ட தேசிய பூப்பந்து சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ நோர்சா சக்காரியா சமூக...