வேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார்

கோலாலம்பூர் - மலேசிய முன்னேற்றக் கட்சி (Malaysian Advancement Party) என்ற பெயரிலான புதிய அரசியல் கட்சியை ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தோற்றுவித்துள்ளார். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராகச் செயல்படும் வேதமூர்த்தி, இந்திய சமுதாயத்தின் நலன்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தக் கட்சி தோற்றுவிக்கப்படுவதாக அறிவித்தார். இந்தக் கட்சிக்கான பதிவு மலேசிய சங்கப் பதிவிலாகாவுக்கு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வேதமூர்த்தி மேலும் கூறியுள்ளார். இந்தக் கட்சியின் நோக்கம் இந்தியர்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார, சமய, சமூக நலன்களைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், முன்னெடுத்துச் செல்வதாகவும் இருக்கும் என்பதையும்...

ஆதி.இராஜகுமாரன் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

Rajakumaran Photo Feature

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலமான நயனம் வார இதழில் ஆசிரியரும், மக்கள் ஓசை பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரனின் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9-ஆம் தேதி மதியம் 12.00 மணியளவில் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். நண்பர்களும், உறவினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆதி.இராஜகுமாரனின் குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.  

ஸ்ரீ செத்தியா – பலாக்கோங் : 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்!

பலாக்கோங் - இன்று நடைபெறும் பலாக்கோங், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் இன்று மாலை 4.00 மணி வரையில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பலாக்கோங்கில் இன்று மாலை 4.00 மணியோடு 39 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஸ்ரீ செத்தியா தொகுதியில் மாலை 4.00 மணியோடு 41 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். பொதுத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இடைத் தேர்தல் வருவதும், தேர்தல்...

நிபோங் திபால் – பெர்மாத்தாங் பாவ் – அன்வார் எங்கே போட்டியிடுவார்?

ஜோர்ஜ் டவுன் - பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அவரது துணைவியார் வான் அசிசாவும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அறிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது சொந்த மாநிலமான பினாங்கில்தான் அன்வார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பினாங்கில் 2 தொகுதிகள் அன்வார் போட்டியிட அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அன்வாரின் சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ்,...

கார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)

சென்னை - ஷங்கரின் '2.0' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்திற்கு 'பேட்ட' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் முன்னோட்டத்தின் காணொளி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு ஒரே நாளில் 13 இலட்சம் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்து சமூக ஊடங்களில் கலக்கி வருகிறது. அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:- https://www.youtube.com/watch?v=6QS5veNk-gI&feature=youtu.be

Death of Navy cadet Soosai Manickam – Health Ministry urged to intervene

IPOH -- The family of J. Soosaimanicckam who died while undergoing training as a cadet officer of the Royal Malaysian Navy (RMN) in Lumut has called on the Health Ministry to look into the improper conduct by the Seri Manjung Hospital and the Perak Health Department. Lawyers for the family of the late Soosai manicckam, Zaid Malek  and Mahajoth Singh in a statement today said the final and conclusive post-mortem report should be released...

Constitutional challenge: Federal Court set Sept 13 for clarification

PUTRAJAYA -- The Federal Court has set Sept 13 for clarification regarding the constitutional challenge bid by the Malaysian Bar and Advocates Association of Sarawak (AAS) over the validity of former top two judges's extension of tenure as Chief Justice and Court of Appeal President then after reaching retirement age. Solicitor for the Malaysian Bar, Farez Jinnah said he received...

ஸ்ரீ செத்தியா – பலாக்கோங் : வாக்களிப்பு தொடங்கியது

பலாக்கோங் - இன்று நடைபெறும் பலாக்கோங், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்கு சுமுகமாகத் தொடங்கியது. பலாக்கோங்கில் இன்று காலை 9.00 மணியோடு 9 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஸ்ரீ செத்தியா தொகுதியில் காலை 9.00 மணியோடு 12 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பலாக்கோங் சட்டமன்றம் பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 16 வாக்களிப்பு மையங்களில் மொத்தம் 128 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வாக்களிப்பு மையங்களுக்காக 14 பள்ளிகள், ஒரு பொது மண்டபம், ஒரு பொழுதுபோக்கு மையம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. பலாக்கோங் 62,219 வாக்காளர்களைக் கொண்டிருக்கின்றது. பக்காத்தான்...

நஜிப்பிடம் 9.5 மில்லியன் ஷாபி அப்துல்லா பெற்றார் – புதிய ஆதாரம்

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு நஜிப் துன் ரசாக் 9.5 மில்லியன் ரிங்கிட் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளில் தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, அன்வாரின் வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் (படம்) தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அன்வாருக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்டதில் ஷாபி அப்துல்லாவுக்கு உள்நோக்கமும், தனிப்பட்ட நலனும் இருந்தது என்பதையும் இந்தப் புதிய ஆதாரம் காட்டுவதாக ராம் கர்ப்பால்...

விஜயபாஸ்கர் பதவி விலகுவாரா? கைது செய்யப்படுவாரா?

சென்னை - குட்கா விவகாரத்தில் அதிரடியாகக் களமிறங்கிய இந்தியாவின் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) நேற்று 40 இடங்களில் சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக டிஜிபி (காவல் துறை தலைமை இயக்குநர்) இராஜேந்திரன், முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இராஜேந்திரனும் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன. விஜயபாஸ்கரை அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றி விட்டு மற்றொருவரை அவருக்குப்...