Home நாடு தேச நிந்தனை குற்றத்திற்காக கர்ப்பாலுக்கு 4000 ரிங்கிட் அபராதம்!

தேச நிந்தனை குற்றத்திற்காக கர்ப்பாலுக்கு 4000 ரிங்கிட் அபராதம்!

1510
0
SHARE
Ad

KARPALகோலாலம்பூர், மார்ச் 11 – தேச நிந்தனை வழக்கில் மூத்த வழக்கறிஞரான கர்ப்பால் சிங்கிற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

கர்ப்பால் சிங்கின் உடல்நிலை, பொதுமக்களின் ஆர்வம் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக நீதிபதி அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, பேராக் மந்திரி பெசார் முகமட் நிஸார் ஜமாலுடினை பதவி நீக்கியதற்கு அம்மாநில சுல்தானுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டார் என கர்ப்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4 ன் படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 3 வருட சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.