Home நாடு 124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்

124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்

901
0
SHARE
Ad

pm-citizenship-handing-31102017 (2)கோலாலம்பூர் – புதிதாக மலேசிய இந்தியர்கள் 1,054 பேருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் துன் ரசாக், அவர்களின் 124 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அவர்களுக்கான குடியுரிமைப் பத்திரங்களை நேரடியாக வழங்கினார்.

இந்தியர்களின் நலன் குறித்தும் மேம்பாடுகள் குறித்தும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல என்றும் உண்மையானவை என்றும் நஜிப் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்தார்.

pm-citizenship-handing-31102017 (8)இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், ம இ கா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அரசாங்கம் மேலும் 1,054 பேருக்கு மலேசிய குடியுரிமைக்கான அனுமதியை வழங்கியுள்ளது என்றும் அவர்களில் 124 பேர் இன்று பிரதமரிடமிருந்து அதற்கான பத்திரங்களை பெறுகின்றனர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

pm-citizenship-handing-31102017 (3)நஜிப் துன் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ், 2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட “மை டப்தார்” ஆவணப் பதிவு இயக்கத்தின் வழி பதிவு செய்த சுமார் 12 ஆயிரம் பேரில் ஏறத்தாழ 7,126 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மேற்கொண்ட “மெகா மை டப்தார்” பதிவின் மூலம் இன்று முதல் கட்டமாக 1,054 பேருக்குக் குடியுரிமை வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா  கூறினார்.

pm-citizenship-handing-31102017 (9)பதிவு செய்துள்ளவர்களில் சிலர் ஆவணப் பிரச்சினையை எதிர்நோக்குவதால், அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண தாம் விரைவில் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியைச் சந்திக்கவிருப்பதாக மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தின் அமுலாக்கக் குழுவுக்கான தலைமை நிர்வாகத் தலைவருமான டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

pm-citizenship-handing-31102017 (1)அமைச்சர் மேலும் பேசுகையில், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அதனை முறையாகப் பதிவுச் செய்வது கட்டாயமாகும். பின்னர், தங்களுக்குப் பிறக்கும் குழந்தையைக் குறிப்பிட்ட நாளுக்குள் தேசிய பதிவிலாகாவில் பதிவு துறையில் பதிவு செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்யத் தவறுகின்றவர்கள் பின்னாளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

pm-citizenship-handing-31102017 (5)“இந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்திய குத்தகையாளர்கள் அரசாங்க குத்தகைகளைப் பெறுவதற்கு ஏதுவாக சில அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்த்தோம். பிரதமர் அதுதொடர்பான அறிவிப்பை செய்யாததற்கு சில காரணங்கள் இருக்கலாம். நாங்கள் பிரதமரிடம் மீண்டும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அதன் அமலாக்கம் குறித்து ஆராய பிரதமர் நிதியமைச்சில் சிறப்பு குழு ஒன்றை அமைக்க வகை செய்யவேண்டும்” என தாம் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக டாக்டர் சுப்ரா தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

pm-citizenship-handing-31102017 (12)இன்றைய நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ தெங்கு அட்னான், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், செடிக் தலைமை இயக்குனர் பேராசிரியர் முனைவர் என். எஸ். இராஜேந்திரன் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

pm-citizenship-handing-31102017 (11)