Home நாடு அன்வாரை முன்கூட்டியே நீதிமன்றம் விடுதலை செய்தால் அம்முடிவை அரசாங்கம் மதிக்கும்

அன்வாரை முன்கூட்டியே நீதிமன்றம் விடுதலை செய்தால் அம்முடிவை அரசாங்கம் மதிக்கும்

726
0
SHARE
Ad

zahid-hamidiஷா ஆலாம் – தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அசிசா அறிவித்திருக்கிறார்.

அதன் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்துரைத்த துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி “அன்வாரை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிமன்றம் முடிவெடுத்தால், அந்த முடிவை அரசாங்கம் மதிக்கும். அம்முடிவில் தலையிடாது” எனத் தெரிவித்தார்.

எனினும் அன்வார் சட்டப்படி நாட்டில் எந்தவித முக்கியப் பதவியையும் வகிக்க முடியாது என்பதையும் சாஹிட் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“நீதிமன்றம் விதிக்கின்ற தண்டனையை அரசாங்கம் மதிக்கும். எத்தனை காலத்திற்கு தண்டனை என்பதை அனைத்துத் தரப்புகளும் மதிக்க வேண்டும்” என்றும் சாஹிட் கூறினார்.

ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் அன்வார், எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுவதாக, வான் அசிசா நேற்று சனிக்கிழமை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.