Home நாடு தைப்பூசம்: செய்வதறிந்து, செயல்படுவது சாலச் சிறந்தது!- சுப்பாராவ்

தைப்பூசம்: செய்வதறிந்து, செயல்படுவது சாலச் சிறந்தது!- சுப்பாராவ்

1284
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தைப்பூசத் திருவிழாவில், பக்தர்கள் இரத ஊர்வலத்தின் போது தேங்காய்களை உடைப்பது வழக்கம். அவ்வாறு, செய்வது எதற்கென்று நன்கு தெரிந்து வைத்திருந்து, பின்பு அதனை செயல்படுத்தினால் நன்மையாக இருக்கும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் கூறினார்.

பக்தர்கள், குறிப்பாக சீன சமூகத்தினர், எவ்வளவுக்கு அதிகமான தேங்காய்கள் உடைக்கிறோமோ, அதற்கு நிகரான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தவறாக புரிந்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான தேங்காய்களை இரத ஊர்வலத்தின் போது உடைப்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

இந்து சமயத்தின் படி, தைப்பூசத்தின் போது, தேங்காய்களை உடைப்பது, பக்தர்கள் கடவுளின் பாதங்களில் தங்களது தலைக்கனத்தை சரணடைய வைப்பதற்கான குறியீடாகும். இது முழு பக்தியுடன் செய்யப்படும் செயலாகும்” என அவர் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

இவ்வாறாக, ஆயிரக்கணக்காக உடைக்கப்படும் தேங்காய்கள் பொதுவில் வீசப்படுகின்றன. மேலும், இதனைக்  காரணமாகக் கொண்டு தேங்காய்களின் விலையும் உயர்த்தப்படலாம் என அவர் கூறினார்.